Connect with us

சினிமா செய்திகள்

தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப்படங்கள்: அஜித், விஜய் சம்பளத்தை நெருங்கிய சிவகார்த்திகேயன்!

Published

on

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ’டான்’ திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்த படமும் கிட்டத்தட்ட 100 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த நிலையில் தொடர்ச்சியாக இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் தற்போது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 25 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், திடீரென 50 முதல் 60 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் சிவகார்த்திகேயன் சம்பளத்தை உயர்த்தவில்லை என்று தயாரிப்பாளர்கள் தேடி வந்து சம்பளத்தை உயர்த்தி தங்களுக்கு கால்சீட் வந்து வேண்டும் என்று கேட்டதாகவும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன .

தற்போது தமிழ், தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். இதற்கு அடுத்ததாக அவர் நடிக்கும் திரைப்படத்திற்கு 60 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன் வரை அஜித்-விஜய் இதே சம்பளம்தான் வாங்கிக் கொண்டு இருந்தனர் என்ற நிலையில் அஜீத் விஜய்யின் சம்பளத்தை கிட்டத்தட்ட சிவகார்த்திகேயன் நெருங்கி விட்டார் என்று கூறப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?