Connect with us

சினிமா செய்திகள்

விஜய் செய்த தவறை செய்யாமல் உச்சத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன்: திருந்துவாரா விஜய்?

Published

on

நடிகர் விஜய் செய்த தவறை ஆரம்பத்தில் செய்ததால் தோல்வி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் தற்போது அந்த தவறை திருத்திக் கொண்டதால் படிப்படியாக முன்னேறி உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் படம் என்றாலே குடும்பத்துடன் பார்த்து மகிழும் காமெடி மற்றும் குடும்ப படம் என்றுதான் அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். அதுபோல்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு கிடைத்தது.

ஆனால் இடையில் காக்கி சட்டை, வேலைக்காரன், போன்ற ஆக்ஷன் படங்களுக்கு சிவகார்த்திகேயன் இடையில் மாறினார். விஜய் அஜித் போல் தானும் ஆக்சன் ஹீரோவாக மாற வேண்டும் என்று இயக்குனரிடம் வற்புறுத்தி ஆக்ஷன் காட்சிகளையும் அவர் சேர்க்க வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து வரிசையாக தோல்வி படங்களை தந்த சிவகார்த்திகேயன் தனக்கு இனிமேல் காமெடி மற்றும் குடும்ப படம் தான் சரியாக வரும் என்று முடிவு செய்தார்.

இதனை அடுத்து ஒரு படத்தின் இயக்குனரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தார். அதற்கு கிடைத்த பரிசுதான் டாக்டர் படத்தின் வெற்றி. அவருடைய திரையுலக வாழ்க்கையில் முதல் 100 கோடி படம் என்பது டாக்டர் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது .

தற்போது டான் உள்பட அனைத்து படங்களுமே இயக்குனரின் முழு பொறுப்பில் சிவகார்த்திகேயன் விட்டுவிட்டார். ஒரு காட்சியில் கூட அவர் தலையிடுவதே இல்லை என்றும் அது மட்டுமன்றி படத்தை ஒப்புக் கொள்ளும்போது அந்த படத்தில் ஃபேமிலி சென்டிமென்ட் காமெடி இருக்கிறதா என்பதைப் பார்த்து தேர்வு செய்து வருகிறார்.

டான் திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் அளவுக்கு வெற்றி படமாக இருக்கும் என்று படம் பார்த்த திரையுலகினர் கருத்து கூறி வருகின்றனர். விஜய் செய்த தவறை ஆர்மபத்தில் சிவகார்த்திகேயன் செய்தாலும் அந்த தவறை திருத்திக்கொண்டு உச்சத்திற்கு அவர் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த தவறை விஜய் எப்போது திருத்தி கொள்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?