வணிகம்
பென்ஷன் இல்லாதவர்களுக்கு மாத வருமானம் வழங்கும் SIP மற்றும் SWP திட்டங்கள்!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
ஓய்வு காலத்துக்கு திட்டமிடுங்கள்: பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் இல்லை!
இன்றைய காலத்தில் மக்களின் சராசரி ஆயுள் அதிகரித்து வருகிறது. ஓய்வு காலத்தில் யாரிடமும் சாராமல் வாழ்ந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்கள், சிறந்த முதலீட்டு திட்டங்களைத் தேர்வு செய்வது அவசியமாகிறது.
அவரவர் தேவைக்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், குறிப்பாக SIP (சிஸ்டமாட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) மற்றும் SWP (சிஸ்டமாட்டிக் வித்ட்ராவல் பிளான்) போன்ற திட்டங்கள் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
SIP – சிறிய முதலீட்டில் பெரிய லாபம்
SIP மூலம் பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) சிறிய தொகையை சீராக முதலீடு செய்து ஒரு பெரிய நிதிக் கார்பஸை உருவாக்க முடியும். அரசாங்க பத்திரங்களை விட, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 12% முதல் 15% வரை சராசரி ஆண்டு வருமானத்தை வழங்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சில சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 20% முதல் 30% வரை கூட ஆண்டின் லாபத்தை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்ஐபி மூலம் தொடர்ந்து முதலீடு செய்தால், ஓய்வுக்கு பிறகு உங்கள் வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்ள பெரும் நிதி உண்டாகும்.
SWP – வழக்கமான வருமானம் பெறுங்கள்
SWP என்பது முதலீட்டாளர்களுக்கு மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் வழக்கமான பணத்தை திரும்பப் பெறுவதற்கான சிறந்த திட்டம் ஆகும். SWP மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் உங்கள் தேவைக்கு ஏற்ப வருமானம் பெற முடியும்.
உதாரணமாக, மாதத்திற்கு ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை ஒரு நிரந்தர வருமானத்தை பெற நீங்கள் SWP மூலம் யூனிட்களை விற்க முடிவு செய்யலாம். இது உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலிருந்து ஒரு நிரந்தர வருமானத்தை உறுதி செய்யும்.
முதலீட்டில் சாத்தியமான அபாயங்கள்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பொதுவாக ஈக்விட்டி தொடர்பானவை என்பதால், அதில் சற்று அபாயம் இருப்பதை அறிவது முக்கியம். அதிக லாபத்திற்கும், பங்குச் சந்தை செயல்திறனுக்கும் நேரடியான தொடர்பு உள்ளது. எனவே, உங்கள் முதலீட்டைத் திட்டமிடுவதற்கு முன்னர் நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
SIP + SWP திட்டங்கள் உங்கள் ஓய்வு காலத்துக்கு பென்ஷன் இல்லாமல் டென்ஷனற்ற வாழ்க்கையை உறுதி செய்யும் சுலபமான வழி ஆகும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


