சினிமா செய்திகள்
நாளை சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: சூப்பர் அறிவிப்பு!

சிம்பு நடித்த திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மும்பை உள்பட பல பகுதிகளில் நடந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் கவனித்து வருகின்றனர்
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கெளதம் மேனனின் பல படங்களுக்கு தாமரை பாடல்கள் எழுதியுள்ளார் என்பதும் அந்த பாடல்கள் அனைத்துமே ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
An exciting melodious 1st Single #KaalathukkumNeeVenum in the lyrics of #Thamarai from @SilambarasanTR_'s #VendhuThanindhathuKaadu will be out tomorrow (May 6th) at 6:30 PM !
An @arrahman Musical
#VTK @menongautham @VelsFilmIntl @IshariKGanesh @rajeevan69 @Ashkum19 pic.twitter.com/gMA2qSUAxm— Vels Film International (@VelsFilmIntl) May 5, 2022