சினிமா செய்திகள்
விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த ஸ்ருதிஹாசன், தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடி சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உன்னைப்போல் ஒருவன் படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடிய ஸ்ருதிஹாசன், சூர்யாவின் 7ம் அறிவு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து விஜய்யின் புலி, அஜித்தின் வேதாளம், விஷாலுடன் பூஜை சூர்யாவுடன் மீண்டும் சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறாமல் சொதப்பிய நிலையில், இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தன.
சினிமா வாய்ப்பு குறைந்த நிலையில், தந்தை கமல்ஹாசனை போல, சன் டிவியில் ஹலோ சகோ எனும் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் தமிழ் சினிமாவில் கமிட் ஆகியுள்ளார் என்ற தகவலை அவரே உறுதி செய்துள்ளார்.
எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தில் ஸ்ருதி ஹாசன் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.






















