சினிமா செய்திகள்
ரஜினியின் ‘தலைவர் 169’ படத்தில் பிரபல நடிகர்: நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 169’ படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருக்கும் தகவல் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு முக்கிய அப்டேட் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பை ஒரு ஸ்டார் படத்தை பதிவு செய்துள்ளதால் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இந்த படத்தில் இணைய இருப்பதை நாளை அறிவிக்க உள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
ஏற்கனவே ரஜினியின் ’தலைவர் 169’ திரைப்படத்தில் சிவராஜ்குமார் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நாளை அந்த தகவல் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் நாளை அது குறித்த தகவல்களும் வெளி வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Update Tomorrow at 11am! pic.twitter.com/s4a4bi1HoR
— Sun Pictures (@sunpictures) June 16, 2022