சினிமா
போர்ச்சுகலில் குடும்பத்துடன் டூர் அடித்து வரும் அஜித், ஷாலினி பகிர்ந்த புகைப்படம்!

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்தவொரு சமூக வலைதளங்களிலும் நடிகர் அஜித் இல்லாத நிலையில், அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். இந்நிலையில், அவர் அஜித் போர்ச்சுகல் நாட்டில் சுற்றுலா செய்து வரும் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களுக்கு ஏகே 62 அப்டேட் வரப்போகும் சிக்னலை கொடுத்துள்ளார்.
பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தளபதி விஜய்யின் லியோ படத்தின் அடுக்கடுக்கான அப்டேட்களை கொடுத்து விட்டு அப்புறம் சந்திக்கிறேன் என்றே செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ டாட்டா காட்டி உள்ளது.

#image_title
ஆனால், ஏகே 62 படத்தின் அறிவிப்பு போட்டியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படத்தின் இயக்குநர் யார் என்பதே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
நடிகர் அஜித் வழக்கம் போல கிடைத்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு வெளிநாடுகளில் ஜாலியாக தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார். போர்ச்சுகல் நாட்டில் அஜித் சுற்றுலா செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தின் விடுமுறை கொண்டாட்ட போட்டோக்களை போட்டு அஜித் ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தி வருகிறார்.
ஏகே 62 அப்டேட் கிடைக்கவில்லை என்றால் என்ன அஜித் தரிசனம் கிடைத்ததே என ரசிகர்கள் ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். துணிவு படத்தின் தலையாட்டி பொம்மை வில்லன் ஜான் கொக்கனும் ஷாலினி போஸ்ட்டுக்கு லைக் போட்டு கமெண்ட் போட்டுள்ளார்.