சினிமா
விரட்டப்படட் விக்னேஷ் சிவன்; லண்டனுக்கு புறப்பட்ட மகிழ் திருமேனி! ஏகே62 வாய்ப்பு கிடைக்குமா?

அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கப் போகிறோம் என ஆசையுடன் இருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் கடைசி நேரத்தில் கழட்டிவிடப்பட்ட நிலையில், லண்டனுக்கே குட் பை சொல்லிட்டு சென்னைக்கு வந்து விட்டார்.
நண்பர்கள் அழைத்தால் கூட கடந்த சில நாட்களாக தொலைபேசியை எடுக்காமல் இருந்த இயக்குநர் மகிழ் திருமேனி தற்போது ஏகே 62 படத்தின் கதையை சுபாஷ்கரனிடம் சொல்லி க்ரீன் சிக்னல் வாங்க லண்டனுக்கு பறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் அஜித் கதையையும் இயக்குநரையும் தயாரிப்பு நிறுவனமே உறுதி செய்து கொள்ளட்டும் என விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவனை வெளியேற்றி விட்டு மகிழ் திருமேனியை இயக்கும் எல்லா வேலைகளையும் லைகா தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தான் செய்து வருகிறார் என்கின்றனர்.
மகிழ் திருமேனி ஃபுல் பவுண்டட் ஸ்க்ரிப்ட் உடன் லண்டன் புறப்பட்டு சென்றுள்ள நிலையில், அவர் சொல்லும் கதை சுபாஷ்கரனை திருப்திப்படுத்தினால் தான் அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர்.
முன்னதாக மகிழ் திருமேனி நடிகர் உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் படத்தை இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், ஏகே 62 படத்தின் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!