சினிமா செய்திகள்
சொந்தமாக ஓடிடி ஆரம்பிக்கும் ஷாருக்கான்: அனைத்து மொழி படங்களும் ரிலீஸா?
ஓடிடியில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது என்பது தற்போது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது என்பதும், முன்னணி நடிகர்களின் படங்கள் கூட தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் இந்தியாவில் அமேசான், ஹாட்ஸ்டார், சோனிலைவ், நெட்ப்ளிக்ஸ் உள்பட ஒரு சில முன்னணி ஓடிடி நிறுவனங்கள் தான் திரைப்படங்களை வாங்கி ரிலீஸ் செய்து வரும் நிலையில் ஆஹா ஓடிடி உள்பட ஒரு சில புதிய ஓடிடி தளங்களும் அறிமுகமாகி வருகின்றன .
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சொந்தமாக ஒரு ஓடிடி தளத்தை உருவாக்கி இருப்பதாகவும் ஷாருக்கான் பிளஸ் என்ற இந்த ஓடிடி தளம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது .
இந்த ஓடிடியில் தமிழ் ஹிந்தி உள்பட அனைத்து இந்திய மொழி திரைப்படங்களும் ரிலீஸ் செய்யப்படும் என்றும் ஹாலிவுட் படங்களையும் வாங்கி ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.