தமிழ்நாடு
13 மாவட்டங்களில் சில நிமிடங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை அறிக்கை!

வெப்பச் சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
மேலும் பருவமழையும் விரைவில் தொடங்க இருப்பதை அடுத்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மழைக்கான அறிகுறி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மழை பெய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜூன் 13ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை தமிழகம் புதுவை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.