Connect with us

ஆன்மீகம்

நிதானம், நேர்மைக்கு பரிசாக நிம்மதியைத் தரும் சனிப்பெயர்ச்சி 2025: 12 ராசிகளுக்கான பலன்கள்

Published

on

சனிப்பெயர்ச்சி 2025: 12 ராசிகளுக்கான பலன்கள்

சனிப்பெயர்ச்சி 2025: 12 ராசிகளுக்குமான பலன்களை யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ கணித்து தந்துள்ளார். அதோடு, இந்த ஆண்டில் முக்கியமான கிரங்களான குரு மற்றும் ராகு-கேது பெயர்ச்சியும் நிகழ இருக்கிறது. இந்த அமைப்புகள் அனைத்தையும் கணக்கிட்டு, மிதுன ராசியினருக்கான திருக்கணித பஞ்சாங்க முறைப்படியான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே தரப்பட்டிருக்கிறது.

மேஷம்:

சனிபகவான் உங்கள் ராசிக்கு பத்து மற்றும் பதினொன்றாம் இடத்துக்கு உரியவர். அவர் இப்போது 12-ம் இடத்துக்கு வருகிறார். இது உங்களுக்கு ஏழரை சனியின் தொடக்கம். அதேசமயம், உங்கள் ராசியில் சனிபகவான் நீசம் அடையக்கூடியவர். அவர் இப்போது விரயத்திற்கு வருவதும், அடுத்து வரும் குரு, ராகு-கேது பெயர்ச்சிகளால் ஏற்படும் மாற்றமும் உங்களுக்கு சகல விதத்திலும் நன்மை தருவதாகவே இருக்கும்.

ரிஷபம்:

சனிபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பது மற்றும் பத்தாம் இடத்துக்கு உரியவர். அவர் இப்போது 11-ம் இடத்துக்கு வருகிறார். ‘பதினோறாம் இடம் என்பது லாப ஸ்தானம்’. இது உங்களுக்கு சகல விதத்திலும் ஆதாயத்தையே தரும். அதோடு, வரக்கூடிய குரு, ராகு-கேது பெயர்ச்சிகளும் உங்களுக்கு யோகத்தைத் தருவதாகவே இருக்கும்.

மிதுனம்:

சனிபகவான் உங்கள் ராசிக்கு எட்டு மற்றும் ஒன்பதாம் இடத்துக்கு உரியவர். அவர் இப்போது 10-ம் இடத்துக்கு வருகிறார். பத்தாம் இடம் என்பது ஜீவன ஸ்தானம், என்கிற கர்ம ஸ்தானம். அடுத்து வரும் குரு, ராகு-கேது பெயர்ச்சிகளால் ஏற்படும் மாற்றமும் உங்களுக்கு உழைப்புக்கு உரிய பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.

கடகம்:

சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழு மற்றும் எட்டாம் இடத்துக்கு உரியவர். அவர் இப்போது 9-ம் இடத்துக்கு வருகிறார். இது பித்ரு ஸ்தானம் என்கிற பாக்ய ஸ்தானம். இந்த அமைப்பு உங்களுக்கு மிகச் சிறப்பான நற்பலனைத் தரும். அதோடு அடுத்து வரும் குரு, ராகு-கேது பெயர்ச்சிகளால் ஏற்படும் மாற்றமும் உங்களுக்கு பல விதத்திலும் நன்மை தருவதாகவே இருக்கும்.

சிம்மம்:

சனிபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்துக்கும் ஏழாம் இடத்துக்கும் உரியவர். அவர் இப்போது 8-ம் இடத்துக்கு வருகிறார். இது உங்களுக்கு அஷ்டம சனியின் காலகட்டம். அதேசமயம் இந்த சமயத்தில், குருவின் வீட்டுக்கு சனி சென்றிருப்பதும், அடுத்து வரும் குரு, ராகு-கேது பெயர்ச்சிகளால் ஏற்பட இருக்கும் கோள் சார மாற்றமும் உங்களுக்கு பலவிதத்திலும் அனுகூலமான பலன்களையே தரும்.

கன்னி:

சனிபகவான் உங்கள் ராசிக்கு ஐந்து மற்றும் ஆறாம் இடத்துக்கு உரியவர். அவர் இப்போது 7-ம் இடத்துக்கு வருகிறார். 7-ம் இடம் என்பது களத்திர ஸ்தானம். அதோடு வர இருக்கும் குரு, ராகு-கேது பெயர்ச்சிகளால் ஏற்பட இருக்கும் கிரஹ நிலை மாற்றம் ஆகியவற்றையும் சேர்த்துக் கணக்கிடும்போது, இது உங்களுக்கு உன்னதமான நன்மைகளைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

துலாம்:

சனிபகவான் உங்கள் ராசிக்கு நான்கு மற்றும் ஐந்தாம் இடத்துக்கு உரியவர். அவர் இப்போது 6-ம் இடத்துக்கு வருகிறார். இது உங்களுக்கு சத்ரு ரோக ஸ்தானம் ஆகும். இது உங்கள் மனதில் இதுநாள்வரை இருந்த வீண் குழப்பங்கள் நீங்கும் அமைப்பாகும். அதோடு அடுத்தடுத்து வரும் குரு, ராகு-கேது பெயர்ச்சிகளும் உங்களுக்கு நற்பலன்களைத் தரக்கூடியதாகவே இருக்கும்.

விருச்சிகம்:

சனிபகவான் உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்குச் சொந்தக்காரர். அவர் இப்போது ஐந்தாம் இடத்துக்கு வருகிறார். இது, புத்திர சந்தான ஸ்தானம் என்கிற பூர்வபுண்ணிய ஸ்தானம் ஆகும். இந்த அமைப்புடன் அடுத்து வரும் குரு, ராகு கேது பெயர்ச்சிகளையும் கணக்கிடும்போது இந்தக் காலகட்டம் உங்களுக்கு முயற்சிகள் பலன் தரும் காலகட்டமாக இருக்கும்.

தனுசு:

சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் இடத்துக்கு உரியவர். அவர் இப்போது நான்காம் இடத்துக்குச் செல்கிறார். இதனை அர்த்தாஷ்டம சனி என்பார்கள். இந்த சமயத்தில் தளராத உழைப்பே உங்களுக்கு தடை இல்லா உயர்வைத் தரும். மேலும் அடுத்து வரும் குரு, ராகு-கேது பெயர்ச்சிகளாலும் நன்மைகள் ஏற்படும்.

மகரம்:

சனிபகவான், உங்கள் ஜன்ம ராசியான மகரத்துக்கும் இரண்டாம் இடத்துக்கும் உரியவர். அவர் இப்போது இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குச் செல்கிறார். இது உங்களுக்கு முழுமையாக ஏழரைச் சனி விலகும்காலகட்டமாகும். அடுத்து வரும் குரு, ராகு கேது பெயர்ச்சிகளும் உங்களுக்கு சாதகமான பலன்களையே தரும் வகையில் உள்ளன.

கும்பம்:

சனிபகவான், உங்கள் ராசிக்கும், பன்னிரண்டாம் இடத்துக்கும் உரியவர். அவர் இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ஜன்ம ராசியில் இருந்து விலகி, பன்னிரண்டாம் இடத்திற்குச் செல்கிறார். இது ஜன்ம சனி விலகி பாத சனி தொடங்கும் காலகட்டமாகும். மேலும் இந்த ஆண்டில் ஏற்பட உள்ள குரு, ராகு-கேது பெயர்ச்சிகளும் பலவிதங்களிலும் நன்மை தருவதாகவே உள்ளன.

மீனம்:

சனிபகவான் உங்கள் ராசிக்குப் பதினோராம் இடத்துக்கும் பத்தாம் இடத்துக்கும் உரியவர். அவர் இப்போது உங்கள் ராசிக்கு, அதாவது ஜன்ம ராசியான மீனத்துக்கே வருகிறார். இது ஏழரை சனியில் உங்களுக்கு ஜன்ம சனி காலகட்டம். அதே சமயம் இது குருவின் வீடு என்பதும், அடுத்து வரும் குரு, ராகு கேது பெயர்ச்சிகள் சாதகமாக இருப்பதும் கவனிக்க வேண்டியதாகிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

உலகம்7 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன? – PIB விளக்கம்

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை… பணவரவும் வெற்றியும் குவியும்! – 15 மே 2026

ஆன்மீகம்1 நாள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்1 நாள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்1 நாள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்7 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

வணிகம்7 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

வணிகம்7 நாட்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

Translate »
Link. aaa mush love. power only oklahoma.