சினிமா செய்திகள்
புஷ்பா 2 படத்தில் இணைந்த சாய் பல்லவி.. அப்போ நேஷ்னல் கிரஷ் நிலைமை?

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் 250 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
தெலுங்கை தொடர்ந்து இந்தியிலும் புஷ்பா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க அல்லு அர்ஜுன் முனைப்பு காட்டி வருகிறார்.

#image_title
தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் நடித்த மனோஜ் பாஜ்பாயை முக்கிய கதாபாத்திரத்தில் களமிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. விஜய்சேதுபதியை தொடர்பு கொண்ட நிலையில், அவர் தற்போது கால்ஷீட் இல்லை என்று ஒதுங்கி விட்டதாக கூறப்பட்டது.
நடிகை சமந்தா ஓ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிலையில், இந்தியளவில் டிரெண்டானார். ஆனால், புஷ்பா 2ம் பாகத்தில் சமந்தா ஆட மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

#image_title
புஷ்பா 2 படத்தில் நடிகை ராஷ்மிகாவின் கதாபாத்திரம் சீக்கிரமே முடிந்து விடும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இன்னொரு பிரபல ஹீரோயினை படத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வந்தது. நடிகை பிரியாமணி இணையப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், நடிகை சாய் பல்லவி புஷ்பா 2வில் இணைந்துள்ளதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்கா ராய் மற்றும் ராணா டகுபதியின் விராட பர்வம் உள்ளிட்ட படங்களில் சமீபத்தில் நடித்திருந்த சாய் பல்லவி கடந்த ஆண்டு தமிழில் கார்கி படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், புஷ்பா படத்தில் சாய் பல்லவி நடித்தால் வேறலெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.