கிரிக்கெட்
99ல் அவுட் ஆன ருத்ராஜ்: ஐதராபாத் அணிக்கு 200க்கும் மேல் இலக்கு!

இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஹைதராபாத் அணிக்கு சென்னை 200க்கு மேல் இலக்கை கொடுத்துள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்துள்ளது. ருத்ராஜ் 99 ரன்களும், கான்வே 85 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் அணியின் நடராஜன் மிக அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில் 203 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி உள்பட 6 போட்டிகளில் சென்னை அணி நல்ல ரன் ரேட்டில் வென்றால் அடுத்த சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.