டிவி
பிக்பாஸ் வீட்டில் யாரெல்லாம் முகமூடி போட்டுக்கொண்டு உள்ளார்கள்?

பிக்பாஸ் சீசன் 4-ன் அடுத்த விளையாட்டு, யாரெல்லாம் முகமூடி போட்டுக்கொண்டு உள்ளார்கள் என்பது இன்று தொடங்கியுள்ளது.
இந்த விளையாட்டில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு முன்பு ரியோ தனது கருத்துக்களைச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
சுரேஷ் சக்கரவர்த்தி பேசும் போது, ரியோ சொன்னதை உதாரணமாக காட்ட, ரியோவுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. என்னை உதாரணமாகக் காட்டாதீர்கள்.
அவர் யாரை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் என்னை எடுக்க கூடாது டா தம்பி, அந்த முகமூடியைத் தான் விருப்பவில்லை என்று பாலாஜியை பார்த்து கோவமாகக் கூறுகிறார் ரியோ.
அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்யும் சுரேஷ் சக்கரவர்த்தி, நீங்கள் சொன்னதை போன்று எல்லோருக்கும் இரண்டு முக இருக்கும் என்று நல்ல முறையில் தான் கூற விரும்பினேன் என்கிறார். ஆனாலும் கோவம் குறையாத ரியோ நன்றி என்று சுரேஷ் சக்கரவர்த்தி பேசியது பிடிக்காதது போலவே எரிச்சலுடன் கூறுகிறார்.
இதுவே இன்றைய பிக்பாஸ் வீட்டின் 2வது ப்ரோமோ.


















