வணிகம்
வரலாறு காணாத உயர்வில் ஏப்ரல் மாத GST வருவாய் – ரூ.2.37 லட்சம் கோடியை எட்டியது!

ஜிஎஸ்டி வருவாயில் புதிய உச்சம் – ரூ.2.37 லட்சம் கோடியை கடந்தது!
இந்தியாவில் 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (GST) திட்டம், வருமானம் சேகரிப்பில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் GST மூலம் பெறப்படும் வருவாயை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வரும் நிலையில், 2025 ஏப்ரல் மாதம் வரலாறு காணாத வரி வசூல் ஏற்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையின்படி, கடந்த மாதம் மட்டும் ரூ. 2.37 லட்சம் கோடி GST வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, GST நடைமுறைக்கு வந்ததிலிருந்து பதிவான அதிகபட்ச வருவாயாகும்.
மேலும், கடந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, இம்முறை 12.6% அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிவுசெய்யும் காலம் என்பதால், நிறுவனங்கள் சரியான முறையில் கணக்குகளை தாக்கல் செய்திருப்பதும் இந்த அதிக வருவாயின் காரணமாக கூறப்படுகிறது.
இந்த வருவாய் உயர்வு, நாட்டின் சரிவுகொண்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க, நிதியமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் GST செயலாக்கம் மேம்படுத்தப்பட்டதற்கான ஒரு சான்றாக பார்க்கப்படுகிறது.









