டிவி
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தலைகாட்டாத ‘கதிர்’ குமரன்… காரணம் என்ன?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் ஆக நடித்து வரும் நடிகர் குமரன் சில நாட்களாக சீரியலில் தலைகாட்டவே இல்லை. இதற்கான காரணம் என்ன என ரசிகர்கள் தொடர்ந்து ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஆக பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது. இந்த சீரியலில் மூன்றாவது மகன் ஆக நடிகர் குமரன் ‘கதிர்’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில நாட்களாக இவர் சீரியலில் எந்தவொரு காட்சியிலும் தென்படவே இல்லை. இதனால் கதிருக்கு என்னாச்சு என ரசிகர்கள் சமுக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். சீரியல் படி கதிர் வெளியூருக்குச் சென்று உள்ளதாகக் கூறி கதையை நகர்த்தி வருகின்றனர்.
முல்லை சித்ரா-வின் மறைவுக்கும் குமரன் சீரியலில் இல்லாததற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ என்ற வகையிலும் கேள்விகள் உலாவத் தொடங்கின. ஆனால், உண்மையில் கதிர் ஆக நடிக்கும் குமரனுக்கு பட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதாம். அதுக்காக பெங்களூருவுக்கு படப்பிடிப்புக்குச் சென்றுள்ளாராம் குமரன். இதன் காரணமாகவே குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கவில்லையாம். சீக்கிரமே தொடரின் ஷூட்டிங்-க்கு வந்துவிடுவார் என்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

















