Connect with us

உலகம்

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற அழகி ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓவா? சில ஆச்சரிய தகவல்கள்!

Published

on

சமீபத்தில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த போனி கேப்ரியல் என்பவர் மிஸ் யுனிவர்ஸ்அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் அவருக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவர் ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் சிஇஓ என்பது தற்போது தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான 71 வது மிஸ் யுனிவர்ஸ்அழகி போட்டி அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் இருந்து 84 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்ட நிலையில் இதில் அமெரிக்காவை சேர்ந்த 28 வயதான போனி கேப்ரியல் என்பவர் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை பெற்றார்.

இந்த போட்டியில் வெனிசுலா அழகி முதல் ரன்னர் இடத்தையும் டொமினியம் குடியரசு அழகு இரண்டாவது ரன்னாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த திவிதா ராய் முதல் ஐந்து இடங்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெற்ற போனி கேப்ரியல் கடந்த 1994 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நகரில் பிறந்தவர். இவர் பிலிப்பைன்ஸ் தந்தைக்கும் அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர் என்பதும் இதனால் இவர் பிலிப்பைன்ஸ் அமெரிக்கராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போனி கேப்ரியல் ஒரு ஆடை வடிவமைப்பாளர் என்று கூறப்படுகிறது. அவர் இந்த மிஸ் யூனிவர்ஸ் போட்டியின் போது தான் தனது உடைகளை தயாரிக்கும் போது மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் மூலம் தயாரிப்பதாகவும் இதனால் உலகில் மாசு ஏற்படுவதை குறைப்பதாகவும் கூறினார். அவரது இந்த ஒரு குறிப்பு தான் அவருக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெற்றுத் தந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் சி.இ.ஓவாக உள்ளார் என்பதும் பெண்களுக்கான ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குப்பைகளில் போடும் பொருட்களை வைத்து அவர் ஆடைகளை வடிவமைத்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேப்ரியல் தான் மிக வயதான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெற்றவர் என்ற பெருமையை பெறுகிறார் என்பதும் அதுமட்டுமின்றி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற ஒன்பதாவது அமெரிக்கர் என்பதும், மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பிலிப்பைன்ஸ் அமெரிக்கர் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் சிறு வயதிலிருந்து கைப்பந்து வீராங்கனியாக இருந்தவர் என்பதும் பல்வேறு திறமைகளுடன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளியில் படிக்கும் போதே தனக்கு ஆடை வடிவமைப்பில் ஈடுபாடு அதிகம் என்றும் புதிய புதிய டிசைன்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டு உள்ளேன் என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?