இந்தியா
லார்சன் மற்றும் டூப்ரோ சி.இ.ஓ ஒருநாள் சம்பளம் ரூ.16.7 லட்சம்.. சென்னையை சேர்ந்தவருக்கு அடித்த லக்..!

உலகின் முன்னணி கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரியும் எஸ்என் சுப்பிரமணியன் அவர்கள் ஒரு நாளுக்கு 16.7 லட்சம் சம்பளம் பெறுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனம் உலகின் மிகப்பெரிய கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்று என்பதும் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3 லட்சம் கோடிக்கு ரூபாய் மேல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான எஸ்என் சுப்பிரமணியம் என்பவர் நாள் ஒன்றுக்கு 16.7 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், பிரமாண்டமான இந்த நிறுவனத்தின் உள் கட்டமைப்பு திட்டங்களை கையாள்வதில் திறமையானவர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் பல பொறுப்புகளில் இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1960 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவரது தந்தை ரயில்வே இந்தியன் ரயில்வேயில் பொது மேலாளராக இருந்தார். பள்ளி படிப்பிற்கு பின்னர் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த இவர் புனேவில் உள்ள சிம்பயோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ படித்தார். அதன் பிறகு லண்டன் பிசினஸ் ஸ்கூலில் இருந்து நிர்வாக மேலாண்மை திட்டத்தையும் படித்தார்.
மீனா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சுஜய் மற்றும் சூரஜ் என்ற இரு மகன்கள் உள்ளனர். கிரிக்கெட் மற்றும் மேற்கிந்திய பாரம்பரிய இசையை இசையில் விருப்பமுள்ள இவர் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தில் சேர்ந்த பின் தான் இவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியது.
லார்சன் மற்றும் டூப்ரோநிறுவனத்தின் தலைவர் மற்றும் பைனான்ஸ் போல்டிங் லிமிடெட் L&T ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் இயக்குனராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டி, பெங்களூர் விமான நிலையம் போன்ற திட்டங்களை இவர்தான் நிறைவேற்றினார் என்பதும் 2021 ஆம் ஆண்டில் தரமான கட்டுமான கட்டிடங்களில் மொத்தம் உள்ள 100 தரவரிசை பட்டியலில் 11வது இடத்தை பிடித்தார் என்பதும் பல சிறந்த நிர்வாக அதிகாரி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது சம்பளம் கடந்த ஆண்டு கடந்த நிதியாண்டில் 61.27 கோடி என்றும் அதாவது ஒரு நாளைக்கு 16.7 லட்சம் என்றும் கூறப்படுகிறது. அதற்கு முந்தைய ஆண்டை விட அவர் 115 சதவீதம் சம்பள உயர்வு பெற்றார் என்பதும் கடந்த ஆண்டு அவராகவே முன்வந்து தனது சம்பளத்தை பெருமளவு குறைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.