வணிகம்
RBI அதிரடி: 4 வங்கிகள் நிரந்தரமாக மூடல் – உங்கள் பணத்தை உடனே பாதுகாப்பீர்கள்!

RBI அதிரடி: 4 வங்கிகள் நிரந்தரமாக மூடல் – உங்கள் கணக்கு இதில் இருக்கிறதா? பணத்தை உடனே எடுத்துக்கொள்ளுங்கள்!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏப்ரல் மாதத்தில் நான்கு முக்கிய கூட்டுறவு வங்கிகளின் வங்கிஉரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்துள்ளது. மேலும், 8 வங்கிகளுக்கு கடுமையான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் ரத்து செய்யப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வணிகம் நடத்த முடியாது. இருப்பினும், DICGC (Deposit Insurance and Credit Guarantee Corporation) மூலம் ரூ.5 லட்சம் வரை வைத்திருக்கும் தொகைக்கு காப்பீட்டுத் தொகை பெற முடியும்.
✅ நிரந்தரமாக மூடப்பட்ட வங்கிகள்:
அஞ்சனா அர்பன் கூட்டுறவு வங்கி, அவுரங்காபாத் – உரிமம் ரத்து: ஏப்ரல் 22
கலர் மெர்ச்சண்ட்ஸ் கூட்டுறவு வங்கி, அகமதாபாத் – உரிமம் ரத்து: ஏப்ரல் 16
இம்பீரியல் அர்பன் கூட்டுறவு வங்கி, ஜலந்தர் – வணிகம் முடிவு: ஏப்ரல் 25
சங்கர்ராவ் மோஹிதே பாட்டீல் சஹாகரி வங்கி, அக்லுஜ் – வணிகம் முடிவு: ஏப்ரல் 11
ஏன் உரிமம் ரத்து?
போதுமான மூலதனம் இல்லாதது
வருவாய் ஈட்டும் திறன் குறைபாடு
வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்க முடியாத நிலை
தொடர்ந்தால் நிதி ஆபத்துக்கள் ஏற்படும் என RBI தரப்பு தெரிவிப்பு
அபராதம் விதிக்கப்பட்ட வங்கிகள் (Violation of Guidelines):
ஆர்யவர்ட் வங்கி – லக்னோ
ஸ்ரீ கணேஷ் சககாரி வங்கி – நாசிக்
சிட்டி பேங்க்
பஞ்சாப் நேஷனல் வங்கி
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்
கோடக் மஹிந்திரா வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இந்தியன் வங்கி
இவை தவறான நிதி மேலாண்மை, விதிமீறல்கள் போன்ற காரணங்களுக்காக அபராதம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், வாடிக்கையாளர் பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் பாதிக்கப்படாது என்று RBI உறுதி செய்துள்ளது.


