இந்தியா
வேகமாக பரவும் எலி காய்ச்சல்.. கேரளவில் 23 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் மோசமான எலி காய்ச்சல் காரணமாக 23 பேர் பலியாகி உள்ளனர்.
இரண்டே நாட்களில் இத்தனை பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தால் ஏற்பட்ட சுகாதார குறைபாடு காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவை மேலும் சோதிக்கும் வகையில் அங்கு எலி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு லெப்டோஸ்பிரோசிஸ் காய்ச்சல் என்று பெயர்.
கழிவுகள் மூலம் இது பரவும். இதனால் 50 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

















