தமிழ்நாடு
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பி பதவி: யார் யாருக்கு கிடைக்கும்?

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்பி காலியாக இருக்கும் நிலையில் அந்த பதவிகள் யார் யாருக்கு கிடைக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது.
திமுகவின் ஆர் எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார், அதிமுகவின் எஸ் ஆர் பாலசுப்பிரமணியன், நவநீத கிருஷணன், விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் தான் முடிவடைய போகிறது. இதனை அடுத்து திமுகவுக்கு மூன்று எம்பி பதவிகளும் அதிமுக இரண்டு பதவிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி பதவியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
திமுகவில் உள்ள மூன்று எம்பி பதவிகளும் உதயநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் மூன்று பேர்களின் பெயர்களும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எம்பி ஆக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது .
அதிமுகவை பொறுத்தவரை பொன்னையன், செம்மலை, கோகுல இந்திரா மற்றும் ஜெயக்குமார் ஆகிய நால்வரில் இருவருக்கு எம்பி பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஜெயக்குமாருக்கு கிட்டத்தட்ட எம்பி பதவி உறுதி என்றே தெரிகிறது. இன்னொருவர் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
















