Connect with us

சினிமா

பாபா ரீ ரிலீஸ் படத்தின் வெற்றியை கொண்டாடிய ரஜினிகாந்த்; வைரலாகும் புகைப்படங்கள்!

Published

on

கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை என்பதற்காக பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்து வெளியிட்டனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே காலா, தர்பார், அண்ணாத்த என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை. காந்தாரா உள்ளிட்ட இந்து மதத்தை மையமாக கொண்டு வெளியான படங்கள் வரவேற்பை பெற்ற நிலையில், பாபா படத்தை வெளியிட்டு வசூல் ஈட்டலாம் என்கிற நோக்கத்துடன் கடந்த டிசம்பர் மாதம் பாபா படம் ரீ மாஸ்டரிங் செய்து வெளியானது.

#image_title

புதிய படங்களை விட பாபா படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதின.  இந்நிலையில், அந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பாபா படக்குழுவினரை தனது அலுவலகத்திற்கு அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாபாஜி புகைப்படத்தை வழங்கிய புகைப்படங்கள் வெளியாகி #SuperstarRajinikanth ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில், அந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னட திரையுலகில் இருந்து சிவராஜ்குமார், மலையாள திரையுலகில் இருந்து மோகன்லால், தெலுங்கு திரையுலகில் இருந்து புஷ்பா வில்லன் சுனில் மற்றும் பாலிவுட்டில் இருந்து பிரபல வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃப் என பான் இந்திய நடிகர்களை ஜெயிலர் படத்தில் நெல்சன் களமிறக்கி உள்ளார்.

#image_title

மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம் படத்திலும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

கருப்பு சட்டையில் பாபா ரீ ரிலீஸ் வெற்றியை ரஜினிகாந்த் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி ஞாயிற்றுக்கிழமை அதுவுமா ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?