சினிமா
விரட்டி விட்டாலும் நான் உங்க ரசிகன் தான்; அஜித்தை விடாமல் துரத்தும் விக்னேஷ் சிவன்!

ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் அஜித் வழங்கிய நிலையில், விக்னேஷ் சிவனின் கதை பிடிக்கவில்லை என்றும் தேவையில்லாத டைம் வேஸ்ட் பண்ணிட்டார் என்றும் கடைசி நேரத்தில் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க வேண்டாம் என நடிகர் அஜித் விரட்டி விட்டார்.
கடுப்பான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்திருந்த அஜித்தின் கவர் போட்டோவை தூக்கி வீசி விட்டு நெவர் கிவ் அப் என்கிற தத்துவ வாசகத்தை வைத்தார். மேலும், ஏகே 62 படத்தை தான் செய்வதாக பயோவில் குறிப்பிட்டு இருந்த நிலையில், அதனையும் நீக்கினார்.

#image_title
விக்னேஷ் சிவனின் இந்த செயல் அஜித் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. விக்னேஷ் சிவன் குறித்தும் நடிகை நயன்தாரா பற்றியும் ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை போட ஆரம்பித்தனர்.
நடிகை நயன்தாரா அஜித் மீது கோபத்தில் இருப்பதாகவும், இனிமேல் அவருடன் இணைந்து நடிக்கவே மாட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கின. இந்நிலையில், அஜித்தின் புதிய சிரிக்கும் புகைப்படம் வெளியான நிலையிலும், விக்னேஷ் சிவன், நயன்தாராவை பார்த்து தான் அஜித் இப்படி சிரிக்கிறார் என மீம்கள் பறந்தன.

#image_title
ஆனால், அஜித்தின் அந்த அழகான சிரிப்பை பார்த்த விக்னேஷ் சிவனுக்குள் இருந்த ஃபேன் பாய் வெளியே வந்து கஷ்டமான சூழலில் இருந்தாலும் அஜித்தின் அந்த போட்டோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார் விக்னேஷ் சிவன்.
என்ன தான் அஜித் விக்னேஷ் சிவன் மீது நம்பிக்கை இழந்து அவரை விரட்டி விட்டாலும், விக்னேஷ் சிவன் எப்போதுமே அஜித் ரசிகர் தான் என்பதை நிரூபித்து விட்டார் என ரசிகர்கள் விக்னேஷ் சிவனின் செயலை பாராட்டி வருகின்றனர். மேலும், கண்டிப்பாக எதிர்காலத்தில் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுப்பார் என்றும் வாழ்த்தி வருகின்றனர்.