தமிழ்நாடு
ரஜினிகாந்த் மொடைத்தலையில் சிகை அலங்காரம் செய்கிறார்: கே.பாலகிருஷ்ணன் கடும் சாடல்!

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய அவர் பாஜகவையும், ரஜினிகாந்தையும் கடுமையாக விமர்சித்தார்.
கடந்த 11-ஆம் தேதி துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்தில் துணிச்சலாக முடிவெடுத்த அமித்ஷாவை பாராட்டினார். பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மகாபாரதத்தில் வரும் அர்ஜுனர், கிருஷ்ணர் என ஒப்பிட்டுப் பேசினார். இது தமிழக அரசியலிலும், தமிழ் ஊடகங்களிலும் விவாதமாக மாறியது.
இந்நிலையில் தனது சுதந்திர தின உரையில் பாஜகவை கடுமையாக விமர்சித்த கே.பாலகிருஷ்ணன் ரஜினியையும் ஒரு பிடிபிடுத்தார். ரஜினிகாந்த் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் ஜால்ரா போட்டு துதி பாடி வருகிறார். அவர் மொட்டைத் தலையில் சிகை அலங்காரம் செய்யும் வேலையில் ஈடுபட்டு உள்ளார். இது நிலைக்காது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.