Connect with us

இந்தியா

ரிசர்வ் வங்கியில் இருந்து பணத்தை திருடுவது தீர்வாகாது: மத்திய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

Published

on

ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ரிசர்வ் வங்கியில் இருந்து பணத்தை திருடுவது என கூறியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியானது தனது உபரி நிதியில் அரசின் பங்காக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது 3.6 லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து அரசாங்கத்துக்குக் கொடுக்குமாறு பாஜக தலைமையிலான மத்திய அரசு நெருக்கடி கொடுத்தது. அப்படிச் செய்தால் ரிசர்வ் வங்கியின் தற்போதைய AAA என்ற ரேட்டிங் குறைந்துவிடும். அதனால் இந்தியா பெறும் கடன்களின் மதிப்பு அதிகமாகி சுமை ஏறிவிடும். அது இந்திய பொருளாதாரத்துக்குக் கேடாக முடியும் எனக் கூறி அவர் மறுத்துவிட்டார்.

அதன் பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக வந்த உர்ஜித் படேலும் மோடி அரசின் நிர்ப்பந்தத்துக்குப் பணிய மறுத்து இரண்டு ஆண்டுகளிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார். இது அப்போதே விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் பொருளாதார மந்தமான சூழல் நிலவி வருகிறது. இதனை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த சூழலில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து 1 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளது மத்திய அரசு.

இதனை விமர்சித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தாங்களாக ஏற்படுத்திய பொருளாதார பேரழிவை எவ்வாறு சமாளிப்பது என தெரியாமல் திணறி வருகின்றனர். ரிசர்வ் வங்கியிலிருந்து பணத்தைத் திருடுவது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது. இது துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டவருக்கு மெடிக்கல் ஷாப்பிலிருந்து பேன்ட்-எய்டை திருடி ஒட்டுவது போன்றதாகும் என்றார் காட்டமாக.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?