சினிமா
வரலட்சுமியை தொடர்ந்து ராதிகா ஆவேசம்: ஆயிரம் அழுக்கு மூட்டைகளை முதுகில் வைத்துக் கொண்டு பேசலாமா?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவிஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து, பாக்கியராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட சுவாமி சங்கரதாஸ் என்ற அணி போட்டியிடுகிறது.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் சரத்குமார் இல்லாவிட்டாலும் அவரை விமர்சித்து விஷால் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பிரச்சாரம் தொடர்பாக விஷால் வெளியிட்ட வீடியோ ஒன்றிலும் சரத்குமாரை விமர்சித்துள்ளார். இதற்கு நடிகையும், சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது சரத்குமாரின் மனைவி ராதிகாவும் விஷாலுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், சரத்குமார் மீது கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபித்து இருக்கிறீர்களா? ஆயிரம் அழுக்கு மூட்டைகளை முதுகில் வைத்துக் கொண்டு சரத்குமார் பற்றி பேசலாமா? பிரிவினை பேசுவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தாது என கூறியுள்ளார் ராதிகா.



















