சினிமா செய்திகள்
‘ராதே ஷ்யாம்’ தயாரிப்பாளருக்கு ரூ.100 கோடி நஷ்டமா? அதிர்ச்சி தகவல்!

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்த ‘ராதே ஷ்யாம்’ படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நூறுகோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபாஸ் நடிப்பில் உருவான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் கடந்த 11ஆம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் இந்த படம் பாகுபலி வசூலை விட அள்ளிக் குவிக்கும் என்று கூறப்பட்டது .
ஆனால் கதை சூப்பராக இருந்தாலும் திரைக்கதை சரியில்லை என்றும் ஆமை வேகத்தில் படம் நகர்ந்ததால் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து இந்த படம் வெளியான தியேட்டர்கள் காலியாக இருந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர் .
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ரூபாய் 100 கோடி நஷ்டம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபாஸ் நடித்த சாஹோ திரைப்படம் மிகப்பெரிய நஷ்டம் அடைந்த நிலை தற்போது இந்த படமும் நஷ்டமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.