Connect with us

சினிமா செய்திகள்

பெப்சி தொழிலாளர்கள் இனி வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிக்கை!

Published

on

இனி பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலேயே படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் இனி படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு

தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்றால் பெப்சி தொழிலாளர்களை வைத்து தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்த நிலையில் தற்போது பெப்சி தொழிலாளர்கள் மட்டுமின்றி யாரை வேண்டுமானாலும் வைத்து படப்பிடிப்பை நடத்தலாம் என தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் பெப்ஸி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் இடையே மோதல் முற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், செயலாளர்கள், துணை தலைவர்கள், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட செயற்குழு கூட்டம் மே இரண்டாம் தேதி நடைபெற்றது.

அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரு தரப்பினருக்கும் மட்டுமே காலங்காலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது இருந்து வருகின்றது.

அந்த வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி இருவரும் கையெழுத்திட்டனர். மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அவமதிக்கும் வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் செயல்பட்டதால், இரு அமைப்பிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று அதாவது மே 2 முதல் ரத்து செய்யப்படுகிறது என்று செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .

மேற்படி தீர்மானத்தின் அடிப்படையில் மே 3 ஆம் தேதி முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்களை யாரை வேண்டுமானாலும் வைத்து படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?