சினிமா செய்திகள்
ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா: ‘வாடிவாசல்’ தள்ளிப்போகிறதா?

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் உடன் மீண்டும் சூர்யா ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் சில சர்ச்சைகளை எழுப்பினாலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது சூர்யா, பாலா இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான ’வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார் என்பது தெரிந்ததே.
ஆனால் இன்னும் விடுதலை படத்தையே முடிக்காமல் இருக்கும் வெற்றிமாறன் அடுத்து வாடிவாசல் படத்தை உடனடியாக தொடங்குவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது .
இந்த நிலையில் வாடிவாசல் படத்திற்கு முன்பாக ஞானவேல் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்திருப்பதாகவும் இதுவும் ஜெய்பீம் போலவே ஒரு சமூகப் பிரச்சனையை அலசும் படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.




















