இந்தியா
குடியரசு தலைவர் வேட்பாளர் இவரா? ஸ்டாலினுக்கு செக் வைத்த பாஜக!

இந்தியாவில் குடியரசு தலைவர் தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் பொது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அமையும் ஒரு கூட்டணியாக கருதப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளையும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒன்றினை பாஜக திட்டமிட்டு வருகிறது. இதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடவைக்க பாஜக திட்டமிட்டுள்ளது .
தென்னிந்திய தலைவர் என்ற முறையில் சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் முக ஸ்டாலின் ஆகிய மூவருமே அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்றும் அதையும் மீறி அவர்கள் எதிர்த்தால் அவர்களுடைய இமேஜ் பாதிக்கும் என்றும் பாஜக திட்டமிட்டு அவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்டால் நிச்சயம் திமுக ஆதரவு தந்து தான் ஆக வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக ஒரு பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்த ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் முயற்சி செய்வார்கள் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராக எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
குடியரசு தலைவர் தேர்தல் நெருங்கும்போது இன்னும் இது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.