தமிழ்நாடு
நாங்கள் நினைத்தால் பெரும் படையுடன் கர்நாடகாவுக்குள் நுழைய முடியும்: பிரேமலதா எச்சரிக்கை!

நாங்கள் நினைத்தால் பெரும்படையுடன் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைய முடியும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கர்நாடக முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாக மேகதாது அணை குறித்த விவகாரம் நடைபெற்று வருகிறது. இரு மாநில முதல்வர்களும் பிரதமரை சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் அனுமதி பெறாமலேயே நாங்கள் மேகதாது அணையை கட்டுவோம் என கர்நாடக மாநிலம் உறுதியாக உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என தமிழக அரசும் உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று ஓசூரில் போராட்டம் நடத்தினார். கர்நாடக எல்லையில் அவர் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தின் போது அவர் பேசியதாவது:
ஓசூர் எல்லைவரை வந்துவிட்டோம். கர்நாடக அதிக தொலைவில் இல்லை. நாங்கள் நினைத்தால் இப்போதே பெரும்படை திரட்டி பெங்களூக்குள் நுழைய முடியும். எங்களால் உங்கள் எல்லைக்குள் வர முடியும். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறன். நமக்குள் பிரிவினை வேண்டாம் என தமிழக விவசாயிகள் சார்பில் கூறிக்கொள்கிறேன்.
கர்நாடக முதலமைச்சருக்கு எச்சரிக்கையுடன் வேண்டுகோள் விடுகிறேன் மேகதாது அணை திட்டத்தை நிறுத்துங்கள். கர்நாடக- தமிழ்நாடு மக்களிடையே பிரிவினை இல்லை. அதுபோலவே தண்ணீரிலும் பிரிவினை இருக்க கூடாது. இவ்வாறு தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசினார்.


















