தமிழ்நாடு
ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை: பிரேமலதா

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி அமமுக கூட்டணியுடன் இணைந்து உள்ள தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன என்பதும் அந்த 60 தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்கள் அறிவிக்க்ப்பட்ட்னர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: அதிமுக கூட்டணியில் சுமூகமாக செல்லவேண்டும் என்பதால் மிக மிகப் பொறுமையுடன் பக்குவமாக இருந்தோம். கனத்த இதயத்துடன் நாங்கள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.
ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லை. ஏதோ நாங்கள் தொகுதிகளை கேட்டு கெஞ்சுகிறோம் என்று எங்களை விமர்சனம் செய்தார்கள். அமமுக-தேமுதிக கூட்டணியை வெற்றி கூட்டணியாக மாற்றுவது எப்படி என்பது எங்களுக்கு தெரியும்.
ஆனால் அதே நேரத்தில் அதிமுக கூட்டணியை வெற்றி கூட்டணியாக மாற்றுவதற்கு உண்டான பக்குவம் எடப்பாடியாரிடம் ல்லை. 18 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என அதிமுகவிடம் நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் பாதி 13 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக திட்டவட்டமாக கூறிவிட்டது. அதனால்தான் நாங்கள் கனத்த இதயத்துடன் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்று பிரேமலதா கூறியுள்ளார். பிரேமலதாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








