Connect with us

வணிகம்

அஞ்சல் அலுவலக RD திட்டம்: மாதம் ₹50,000 முதலீட்டால் 5 ஆண்டுகளில் ₹35 லட்சம் வருமானம் பெறும் சூப்பர் திட்டம்!

Published

on

Post Office RD: 5 ஆண்டுகளில் பாதுகாப்பாக ₹35 லட்சம் சம்பாதிக்க உதவும் அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் திட்டம்!

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற இடங்களில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்காக அஞ்சல் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டம் (Recurring Deposit – RD) சிறந்த விருப்பம். குறைந்த முதலீட்டில் பாதுகாப்பான வருவாய் தேடுவோருக்கு இது சிறந்த திட்டமாக அமைகிறது.

முக்கிய அம்சங்கள்:

  • மாதம் ₹100 முதல் முதலீடு செய்யலாம்.

  • அதிகபட்ச வரம்பு இல்லை.

  • 5 ஆண்டுகளுக்கான திட்டம். மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.

  • வருடத்திற்கு 6.7% வட்டி.

  • கணக்கு ஆரம்பித்து 12 மாதங்களுக்கு பிறகு 50% வரை கடன் பெறலாம்.

  • பிரிவு 80C கீழ் வரிவிலக்கு.

வட்டி மற்றும் முதலீட்டின் நன்மை:
மாதம் ₹50,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ₹30 லட்சம் முதலீடு செய்யப்படும். இதில், வட்டியாக ₹5,68,291 கிடைக்கும். மொத்தம் ₹35,68,291 பெறலாம்.

குறைந்தபட்சம் 3 வருடங்களுக்கு பிறகு கணக்கை மூடலாம். கணக்கின் நாமினி உள்பட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் இதில் உள்ளது.

TDS விதிகள்:
வருடத்திற்கு ₹10,000க்கும் மேலான வட்டி வருமானம் மீது 10% TDS கட்டுப்படும். PAN எண் வழங்காதவர்கள் 20% செலுத்த வேண்டும்.

Translate »
Professional screen door installation repair in waco, temple, killeen, tx mr..