Connect with us

வணிகம்

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 3 மடங்கு உயர்வு – முழு விவரம் இதோ!

Published

on

8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் மாதங்களில் பெரிய அப்டேட் – மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளத்தில் 3 மடங்கு உயர்வு கிடைக்கப்போகிறது!

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 8வது ஊதியக் குழு (8th Pay Commission) உருவாக்கத்தை மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம் மற்றும் குறிப்பு விதிமுறைகள் (Terms of Reference – TOR) இறுதி செய்யப்பட உள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வரலாம் என தகவல்கள் கூறுகின்றன. 2027 ஆம் ஆண்டில் இந்த புதிய ஊதியக் குழு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமும், ஓய்வூதியமும், கட்டணங்களும் அதிகரிக்கப்போகின்றன. கடந்த 7வது ஊதியக்குழுவில் Fitment Factor 2.57 ஆக இருந்தது. தற்போது அது 2.86 ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

✅ சம்பள உயர்வு எவ்வளவு?

  • லெவல் 1: தற்போதைய ₹18,000 அடிப்படையை ₹51,480 ஆக உயர்த்த வாய்ப்பு

  • லெவல் 2: ₹19,900 இருந்து ₹56,914 வரை உயர்வு

  • லெவல் 3: ₹21,700 இருந்து ₹62,062 வரை உயர்வு

  • லெவல் 6: ₹35,400 இருந்து ₹1 லட்சத்திற்கு மேல் உயர்வு

  • லெவல் 10 (IAS, IPS முதலிய அதிகாரிகள்): ₹56,100 இருந்து ₹1.6 லட்சம் வரை சம்பள உயர்வு

மேலும், DA (Dearness Allowance) அடிப்படையில் சம்பளத்துடன் இணைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இதனால் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ₹18,000 இலிருந்து ₹27,000 ஆக உயரக்கூடும்.

இதன் மூலம் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மிகப்பெரிய நன்மை பெறப்போகின்றனர்.

Translate »
Meci việt nam chuyên cung cấp giải pháp sản phẩm phụ trợ nhà xưởng, chuyên sản xuất và lắp đặt rèm nhựa pvc, cửa cuốn nhanh pvc, quạt cắt gió, Đèn, vách,.