தமிழ்நாடு
வேலூர் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. விமான நிலையம் போல மாற உள்ள காட்பாடி ரயில் நிலையம்..!

வேலூர் மக்களுக்ளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக காட்பாடி ரயில் நிலையத்தை விமான நிலையம் போல, சர்வதேச தரத்தில் மாற்ற 329 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பழைய ஸ்டேஷன் கட்டிடம் இரண்டு கட்டங்களாக இடித்து இரண்டு நான்கு மாடிகள் கொண்ட வருகை மற்றும் புறப்பாடு டெர்மினல்களாக கட்டமைக்கப்பட உள்ளது.
மேலும் சர்வதேச தரத்தில் எஸ்கலேட்டர்கள், உணவு நிலையங்கள், குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகள், சில்லறை விற்பனை வளாகம் மற்றும் சுற்றுலா வழிகாட்டி அலுவலகம் போன்றவையும் காட்பாடி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது.
காட்பாடியில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு நாடு முடிவதிலிருந்தும் நோயாளிகள் வருதல், வேலூர் கோட்டை, வேலூர் தங்கக் கோயில், விஐடி பல்கலைக்கழகம் போன்றவற்றால் வேலூர் ரயில் நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், ரயில் நிலையத்தின் வசதிகள் விரைவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.