Connect with us

சினிமா செய்திகள்

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிட வேண்டாம்: பாமக அறிக்கை!

Published

on

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக, தற்போது அவரது அடுத்த படமான எதற்கும் துணிந்தவன் படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிட வேண்டாம் என அறிக்கை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக மாநில செயலாளர் விஜயவர்மன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 3ஆம் தேதி வெளியான திரைப்படம் ’ஜெய்பீம். ஞானவேல் இயக்கிய இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து நடிகர் சூர்யா நடித்துள்ளார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள, உண்மை சம்பவம் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க, கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க, அந்தோணிசாமி என்ற தலித் கிறிஸ்தவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தை வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து, வன்னியர்களின் அடையாளமாக அக்னி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி, காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்று ஒட்டுமொத்த வன்னிய மக்கள் சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல் காட்டியுள்ளனர் .

சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சைப் படுத்தும் விதமாகவும் வன்முறையாளர்களாக தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னிய மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்க கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?