இந்தியா
இனி பென்சன் பெறுபவர்கள் வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை: எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு!

இதுவரை பென்ஷன் பெறுபவர்கள் பென்ஷன் பணம் வாங்குவதற்கு மட்டுமின்றி ஒரு சில விபரங்களை பெறுவதற்காகவும் வங்கி செல்ல வேண்டிய நிலை இருந்த நிலையில் தற்போது எஸ்பிஐ அறிவித்துள்ள புதிய அறிவிப்பால் அந்த நிலை மாறி உள்ளது.
பென்ஷன் பெறும் பயனாளர்கள் தங்களது பென்ஷன் ஸ்லிப்பை இனிமேல் அதற்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய இணையதளம் மூலமே டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும், அதேபோல் பார்ம் 16 என்ற ஆவணத்தையும் தேவைப்படுபவர்கள் இனி அந்த இணையதளம் மூலம் டவுன்லோட் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பென்ஷன் பெற ஒரு தனி போர்ட்டல் ஒன்றை எஸ்பிஐ ஆரம்பித்துள்ளது. இந்த போர்ட்டல் மூலம் தங்களது பண பரிவர்த்தனை குறித்த விபரங்கள், ஆயுள் சான்றிதழ் குறித்த விபரங்கள், தற்போதைய ஸ்டேடஸ் மற்றும் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பென்ஷன் ஸ்லிப் ஈமெயில் வழியாக பெற விரும்பினாலும் அதற்கு கோரிக்கை வைத்து ஈமெயில் வழியாக பென்ஷன் ஸ்லிப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இனி பென்சன் பெறுபவர்கள் வங்கிக்கு சென்று அலைய வேண்டிய நிலை இல்லை என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
மேலும் ’பென்ஷன் சேவ போர்ட்டல்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போர்ட்டல் தளத்தில் பலவிதமான வசதிகள் இருப்பதாகவும் அவை அனைத்தும் பென்ஷன் வாடிக்கையாளர்களுக்கு தேவையானவை என்றும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் இந்த போர்டல் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஏற்கனவே எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது என்பதை என்பது தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் பண்டிகைகால ஹோம்லோனில் வட்டி விகிதத்தை குறைத்தது என்பதும் அதற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.













