சினிமா செய்திகள்
ஏஆர் ரகுமான் முன் திடீரென கோபப்பட்ட பார்த்திபன்: மைக்கை தூக்கி எறிந்ததால் பரபரப்பு

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் முன்பு திடீரென இயக்குனர் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்து கோபப்பட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பார்த்திபன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’இரவின் நிழல்’. உலகின் முதல் முதலாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை கொண்ட இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது .
இந்த விழாவின்போது ஏஆர் ரகுமான் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் உரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மைக் வேலை செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஏஆர் ரகுமான் தர்ம சங்கடத்திற்கு உள்ளானதாக தெரியவந்தது.
இதனை அடுத்து அவருக்கு மாற்று மைக் கொடுக்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் அவர் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது செயலுக்கு தான் மிகவும் வருந்துவதாகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் இது ஒரு அநாகரிகமான செயல் என்றும் தன்னால் எமோஷனலை என்னை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் பார்திபன் கூறினார்.