Connect with us

தமிழ்நாடு

திமுகவில் இணையப் போகிறாரா ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா?

Published

on

சமீபத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வர ஆரம்பித்துள்ளது.

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் உடன் பிறந்த சகோதரர் ஓ.ராஜா மதுரை ஆவீன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆவீன் தலைவராக பதவியேற்றுக்கொண்ட ஓ.ராஜாவுக்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் ஓ.ராஜாவுக்கு மாலை, சால்வை எல்லாம் போட்டு வாழ்த்தினார்கள்.

ஆனால் இந்த சந்தோஷம் சில மணி நேரங்கள் நீடிப்பதற்கு முன்னால் ஓ.ராஜாவை அதிமுக அடிப்படை உறுப்பினரிலிருந்து ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் அதிரடியாக நீக்கினார்கள். இது அதிமுகவிலும், ஊடகத்தினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை திடீரென கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவார்கள் என்பதை சற்றும் எதிர்பார்க்காத ஓ.ராஜா கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நடந்து முடிந்த ஆவின் தலைவருக்கான தேர்தலை ரத்து செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக பேசப்படுகிறது. இதனால் அதிருப்தியில் உள்ள ஓ.ராஜா திமுகவில் இணைய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வருகிறது. திண்டுக்கல்லில் உள்ள திமுக துணைபொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி முன்னிலையில் ஒ.ராஜா தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Programs free build.