உலகம்
ஒமிக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வேரியண்ட்: தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஆபத்தா?
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் சமீபத்தில் கடந்த சில மாதங்களாக ஒமிக்ரான் என்ற வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரசால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸிலிருந்து உருமாற்றம் அடைந்த வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஒமிக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் வேரியண்ட் என்ற பி.ஏ.எ2 என் வைரஸ், ஒமிக்ரான் வைரஸை காட்டிலும் அதி வேகமாக பரவி வருவதாகவும் விஞ்ஞானிகளின் ஆய்வில் தகவல் வெளிவந்துள்ளது
குறிப்பாக இந்த வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தாதவர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இந்த வைரஸின் பாதிப்பு பெரியதாக இருக்காது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


















