பிற விளையாட்டுகள்
ஒலிம்பிக் ஹாக்கி : பிரிட்டனிடம் போராடி இந்திய அணி தோல்வி!

கடந்த சில நாட்களாக டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று வெண்கல பதக்கத்திற்கான மகளிர் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இந்தியா மற்றும் பிரிட்டன் அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில் இரு அணி வீராங்கனைகளும் மிகவும் ஆவேசமாக விளையாடினர்
போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டு கோல்கள் போட்ட பிரிட்டன் அணி முன்னிலையில் இருந்த நிலையில் அதனை அடுத்து இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து இரண்டு கோல் போட்டு சமன்படுத்தினர்.
அதன் பிறகு இந்திய அணி 3-வது கோல் போட்டு முன்னிலையில் இருந்த நிலையில் பிரிட்டன் அணி ஒரு கோல் போட்டு சமன்படுத்தியது. அதன் பின் மீண்டும் பிரிட்டன் அணி ஒரு கோல் போட்டதை அடுத்து 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் முன்னிலையில் இருந்தது
இதனை அடுத்து இரு அணிகளும் இறுதிவரை கோல் போடவில்லை என்பதால் பிரிட்டன் அணி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி வீராங்கனைகள் போட்டியை சமன்படுத்தவும் வெல்லவும் போராடி தோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்திய அணி வீராங்கனைகளின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




















