வணிகம்
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா? அமைச்சர் நம்பிக்கை அளித்தார்!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலாகுமா? அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளிப்பு!
தமிழகத்தில் 2003ஆம் ஆண்டில் புதிய ஓய்வூதிய திட்டம் (New Pension Scheme) அமலுக்கு வந்தது. இதற்கமைய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை ஓய்வூதிக்காக பங்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பழைய ஓய்வூதியத்தில் இருந்தபடி முழுமையான ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு புதிய திட்டத்தில் இல்லை என்பதால், பலர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme – OPS) மீண்டும் அமல்படுத்தக்கோரியும், டிட்டோஜேக் கூட்டமைப்பின் தலைமையிலான போராட்டங்கள் பல கட்டங்களில் நடைபெற்று வருகின்றன. ஜூலை 18ஆம் தேதி, தமிழகமுழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஐ. பெரியசாமி மீண்டும் நம்பிக்கையூட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். கல்வி துறையில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் மற்றும் ஓய்வூதிய கோரிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளதாகவும், ஓய்வூதிய கோரிக்கையை ஆய்வு செய்யும் கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா? செப்.30க்கு முன் அறிக்கை – அக்டோபரில் அறிவிப்பு வருமா?

அரசு ஊழியர்களின் அதிருப்தி – 2026 தேர்தலில் திமுகவுக்கு சவாலாகுமா?

பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழ்நாடு அரசு குழுவிற்கு கடிதம் – செப்டம்பர் 30க்குள் அறிக்கை அவசியம்

OPS அமலுக்கு வருமா? – பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எதிர்பார்ப்பு மீண்டும் உயர்வு!

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா? – திமுக மீது குற்றச்சாட்டும் எதிர்ப்பும்!

அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் தொகை வெளியீடு – பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?



















