Connect with us

வணிகம்

EPF Update: PF பணத்தில் இருந்து 90% வரை எடுக்கும் புதிய வசதி – 3 வருட பங்களிப்பால் போதும்!

Published

on

PF சேமிப்பில் இருந்து 90% பணத்தை எளிதில் எடுக்கும் புதிய சலுகை – EPFO புதிய அறிவிப்பு!

EPF உறுப்பினர்களுக்கான பெரிய நல்ல செய்தி இது! தற்போது மாத வருமானம் பெறும் ஊழியர்கள் தங்களது PF சேமிப்பிலிருந்து வீடு கட்டவோ, நிலம் வாங்கவோ 90% வரை பணத்தை எளிதாக எடுக்கலாம். இதற்கு முன்னர் 5 வருட பங்களிப்பு தேவைப்பட்டது. ஆனால் தற்போது இந்த கால அவகாசம் வெறும் 3 வருடங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு வருடத்திற்கான அட்வான்ஸ் கிளைம் செய்யக்கூடிய உச்சவரம்பும் ₹5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், எப்போதும் முன்பதிவு அல்லது அங்கீகாரம் இன்றி EPF பணத்தை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

✅ முன்பு இருந்த EPF விதிகள்:

  • 58 வயதில் பணி ஓய்வு பெற்ற பின் முழு தொகை பெறலாம்.

  • 2 மாதங்கள் வேலை இல்லாத நிலையில் PF பணத்தை எடுக்க அனுமதி.

  • வீடு, மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற சில காரணங்களுக்கே பகுதி தொகை வித்டிரா செய்ய அனுமதி.

✅ புதிய EPF Withdrawal நிபந்தனைகள்:

  • 3 வருட பங்களிப்பு இருந்தால் 90% தொகை வித்டிரா செய்யலாம்.

  • முன்னேற்பாடு தேவையில்லை, நேரடி அட்வான்ஸ் கிளைம் மூலம் பணம் பெறலாம்.

  • அதிகபட்சமாக ₹5 லட்சம் வரை ஒரு முறையில் பெறலாம்.

  • வீடு வாங்கல், நிலம் வாங்கல், வீடு கட்டுதல் போன்ற தேவைகளுக்காக இந்த வசதி.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Remain indexed, building backlinks and getting your website cited on other sites for both your seo and geo..