Connect with us

வணிகம்

பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழ்நாடு அரசு குழுவிற்கு கடிதம் – செப்டம்பர் 30க்குள் அறிக்கை அவசியம்

Published

on

பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு, தமிழ்நாடு தலைமைச் செயலகச் செயகம் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கியுள்ளது.

அதில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

🔹 காலக்கெடு நீட்டிப்பு இல்லை
எந்த காரணத்தையும் காட்டி குழுவிற்கு கால நீட்டிப்பு வழங்கக்கூடாது. அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடு 30.09.2025க்குள் அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

🔹 தமிழ்நாட்டின் தனித்துவம்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme) தமிழ்நாட்டில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது.

  • தமிழ்நாடு அரசு, ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்துடன் (PFRDA) ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை.

  • ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்களிப்பு மற்றும் வட்டியுடன் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே பாதுகாப்பாக உள்ளது.

  • இதனால், ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த தேவையில்லை.

🔹 ஒன்றிய அரசின் திட்ட குறைகள்

  • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு 18.5% வரை உயரும்.

  • அந்த நிதி பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், நிலையான வருமானம் கிடைக்கும் என உத்தரவாதம் இல்லை.

  • ஊழியர்களின் சேமிப்புகள் பாதுகாப்பில் இல்லை; திரும்பப் பெறும் தொகைக்கு உறுதியும் இல்லை.

  • 25–30 ஆண்டுகள் சேவை செய்து ஓய்வு பெற்ற பிறகு, ஊழியர்கள் தங்கள் பங்களிப்பு மற்றும் வட்டியில் இருந்து வெறும் சிறிய தொகை மட்டுமே பெறுவார்கள்.

🔹 தற்போதைய நிலவரம்
2025 மார்ச் 31 நிலவரப்படி, தமிழ்நாட்டின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 6,24,140 சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்களின் பங்களிப்பு, அரசின் பங்களிப்பு மற்றும் வட்டியுடன் சேர்த்து ₹84,507.27 கோடி இருப்பில் உள்ளது.

🔹 குழுவின் பரிந்துரைகள்

  • இந்த நிதியை பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் (GPF) மாற்ற வேண்டும்.

  • பங்களிப்பு ஓய்வூதியத்தில் உள்ள ஊழியர்களையும் 1978 ஓய்வூதிய விதிகளின் கீழ் கொண்டு வர வேண்டும்.

  • பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

  • ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கும், பணியில் மரணமடைந்தவர்களுக்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது ஷரத்தின் அடிப்படையில் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.

🔹 முக்கிய வலியுறுத்தல்
குழுவின் அறிக்கை அரசிடம் செப்டம்பர் 30, 2025க்குள் கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். எந்தவிதமான கால நீட்டிப்பும் வழங்கப்படாது என்று தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

உலகம்3 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன? – PIB விளக்கம்

தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை… பணவரவும் வெற்றியும் குவியும்! – 15 மே 2026

ஆன்மீகம்1 நாள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்1 நாள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்1 நாள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

இந்தியா7 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்7 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

வணிகம்7 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

வணிகம்7 நாட்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

Translate »
Link. Aaa mush love. Hawaii car transport.