இந்தியா
ரூ.11,990 மதிப்புள்ள ஆப்பிள் ஏர்பாட் வெறும் ரூ.1499க்கு விற்பனை: பிளிப்கார்ட்டின் அதிரடி தள்ளுபடி
ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து பொருள்களும் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது என்பதும் ஆப்பிள் ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் ஐபாட், ஏர்பாட் ஆகியவைகளும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ரூபாய் 11,990 என்ற மதிப்புள்ள ஆப்பிள் ஏர்பாட் வெறும் ரூபாய் 1499 கிடைக்கும் என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் வயர்லெஸ் புளூடூத் ஏர்பாட் பிரீமியம் தரத்துடன் ஒலி இருக்கும் என்பதும் எளிதான இணைப்பு மற்றும் வடிவமைப்பு ஆகியவை காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆப்பிள் ஏர்பாட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் ஐபோனுடன் இந்த ஆப்பிள் ஏர்பாட் இணைந்து கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மூன்றாம் தலைமுறை ஆப்பிள் ஆப்பிள் ஏர்பாட், இரண்டாவது தலைமுறை ஆப்பிள் ஆப்பிள் ஏர்பாட் மற்றும் ஆப்பிள் ஏர்பாட் புரோமாக்ஸ் ஆகியவை விற்பனையாகி வருகின்றன.
உலக அளவில் அதிகம் விற்பனையாகும் ஆப்பிள் ஏர்பாட்டை நீங்கள் வாங்க விரும்பினால் இது சரியான நேரமாக இருக்கலாம் என பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பிளிப்கார்ட் ரூ.1499 விலையில் ஆப்பிள் ஏர்பாட் தருகிறது.
ரூபாய் 11,999 மதிப்புள்ள ஆப்பிள் ஏர்பாட் ரூ.1499 ரூபாய்க்கு நீங்கள் வாங்க வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உங்கள் பழைய ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் 10,500 ரூபாய்க்கு எடுத்துக் கொண்டு, வெறும் 1499 ரூபாய் உங்களிடம் இருந்து பெற்று ஆப்பிள் ஏர்பாட் வழங்குகிறது. இதிலும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருந்தால் மேலும் 5% கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.