வணிகம்
தமிழ்நாட்டில் ரூ.7164 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஓலா.. என்ன சிறப்பு.. எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்?

ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையைத் தொடர்ந்து எலட்ரிக் காரையும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய உள்ளது.
இதற்காக 7,164 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஓப்பாததைத் தமிழ்நாடு அரசுடன் சனிக்கிழமை செய்துள்ளது.
ஓலா நிறுவனம் இந்த 7,164 கோடி ரூபாய் முதலீட்டை அடுத்த 5 ஆண்டுகளில் பகுதி பகுதியாகத் தமிழ்நாட்டில் செய்யும்.
ஒலா கார் தொழிற்சாலையைக் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சிபாட்டில் அமைக்க உள்ளது.

Ola Electric Car Model
இந்த தொழிற்சாலையில் லித்தியம் பேட்டரி செல்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்படும்.
ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் எலக்ட்ரிக் கார்களை இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் விற்பது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஓலா நிறுவனம் ஏற்றுமதி செய்ய உள்ளது.
இந்த தொழிற்சாலையைத் தமிழ்நாட்டில் தொடங்குவதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஓலா நிறுவனத்துக்கு ஓசூர் மற்றும் தருமபுரி மாவட்ட சிப்காட்டில் 2 சக்கர வாகனங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








