இந்தியா
வதந்தி பரப்பிவிட்டு முன்ஜாமீன் கேட்ட பாஜக நிர்வாகியை தமிழகம் செல்லுங்கள் என அனுப்பி வைத்த நீதிமன்றம்!

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது வதந்தி பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். இதனை விசாரித்த நீதிமன்றம் முன்ஜாமீன் கேட்டு தமிழக நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

#image_title
பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடந்த போதிலும் தேஜஸ்வி யாதவ் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டுள்ளார் என அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் பிரசாந்த் உம்ராவ். மேலும் தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக 12 வடமாநில தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டதாகவும் ஒரு விஷமத்தனமான தகவலை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரசாந்த் உம்ராவ்வை கைது செய்ய திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்தது. இந்நிலையில் பிரசாந்த் உம்ராவ் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் மனுதாரர் முன்ஜாமீன் கேட்டு தமிழக நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.