இந்தியா
எப்படியெல்லாம் வதந்தி பரப்பியிருக்கிறார் பாருங்கள் இந்த பாஜக நிர்வாகி: கிடைக்குமா முன்ஜாமீன்?

வடமாநில தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படுவதாக சில தினங்களுக்கு முன்னர் வதந்திகள் பரவியது. இந்த வதந்தியால் தேசிய அளவில் பிரச்சனை ஏற்பட்டு தமிழகத்தில் அசாதாரணமன சூழல் நிலவியது. இதனையடுத்து இந்த வதந்தியை பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது தமிழக காவல்துறை.

#image_title
இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது வதந்தி பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடந்த போதிலும் தேஜஸ்வி யாதவ் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டுள்ளார் என அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் பிரசாந்த் உம்ராவ். மேலும் தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக 12 வடமாநில தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டதாகவும் ஒரு விஷமத்தனமான தகவலை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தான் தமிழக காவல்துறை கலவரத்தைத் தூண்டுதல், மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழியின் அடிப்படையில் குழுக்களிடையே பகையை ஊக்குவித்தல், அமைதியை மீறும் நோக்கத்துடன் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இதனையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடிய அவர், பொய் செய்திக்கு தான் பலிகடா ஆகிவிட்டதாகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பரப்பவில்லை என்றும் அரசியல் நோக்கத்தோடு என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் தனது முன்ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.