இந்தியா
“தேசிய பாதுகாப்பில் சமரசம் இல்லை” – சர்தார் வல்லபாய் படேல் நினைவு நாளில் பிரதமர் மோடி உரை!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
பிரதமர் மோடி உரை: “தேசிய பாதுகாப்பில் சமரசம் எதுவும் இல்லை” — சர்தார் வல்லபாய் படேல் நினைவு நாளில் உறுதிமொழி
ஆமதாபாத்:
குஜராத்தில் நடைபெற்ற சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, “தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எந்தவித சமரசமும் இல்லை” என வலியுறுத்தினார்.
சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத்தின் நர்மதா ஆற்றின் கரையில் அமைந்துள்ள 597 அடி உயர ‘ஸ்டேச்சு ஆஃப் யூனிட்டி’ சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
அப்போது ஹெலிகாப்டர் மூலம் படேலின் சிலைக்கு மலர்கள் தூவப்பட்டன. பின்னர், பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:
“சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, 140 கோடி இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றை எழுதுவதில் அல்ல, அதை உருவாக்குவதில் நேரத்தை செலவிட வேண்டும் என்று சர்தார் படேல் நம்பினார். அவர் இந்தியாவை ஒன்றிணைத்து வரலாற்றை உருவாக்கினார். சுதந்திரத்திற்குப் பிறகு 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியா உடன் இணைப்பது சாத்தியமற்றது என கருதப்பட்டாலும், சர்தார் படேல் அதை நிகழ்த்தினார்.”
மோடி மேலும் கூறியதாவது:
“நாம் எந்தவித சவாலையும் சந்திக்க தயார். ஆனால், நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யமாட்டோம். இது நமது கடமை, இது நமது வலிமை.”
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


