இந்தியா
அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு சீனாவின் கட்டுப்பாடு – சீனா-அமெரிக்க வர்த்தக மோதலில் புதிய திருப்பம்!

சீனாவும் அமெரிக்காவும் இடையே நீண்ட காலமாக நடைபெற்று வரும் வர்த்தக மோதலில், புதிய திருப்பமாக சீனா அரிய தாதுக்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அரிய தாதுக்கள் (Rare Earth Elements) என்பது நவீன தொழில்நுட்ப உபகரணங்கள், மொபைல் போன்கள், மின்சார வாகனங்கள், ராணுவ உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தாதுக்கள் மிக அரிதானவை அல்ல என்றாலும், அவற்றை பிரித்து சுத்திகரிப்பது கடினமான பணியாகும். இந்த துறையில் உலகளவில் சுமார் 90% உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பை சீனாவே மேற்கொண்டு வருகிறது.
இதனால், இந்த துறையில் சீனாவுக்கு பெரிய ஆதிக்கம் உள்ளது. அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடியாக, சீனா அரிய தாதுக்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, வர்த்தக உறவுகளில் அழுத்தம் செலுத்துகிறது.
அரிய தாதுக்களைப் பொருத்தவரை சீனாவை மட்டும் நம்பியிருக்கும் நிலையை மாற்ற முயற்சி செய்யும் அமெரிக்கா, மாற்று ஆதார நாடுகளைத் தேடிக்கொண்டு வருகிறது. இதற்காக புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சுரங்க மூலோபாயங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேபோல், சமீபத்தில் நடந்த டொனால்ட் டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பில் இந்த விவகாரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திப்புக்குப் பின், “சீனாவிடம் இருந்து எந்தவித தடை இல்லை” என டிரம்ப் தெரிவித்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வர்த்தக நெருக்கடி தொடர்கிறது.












